அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை மட்டக்களப்பிற்கு விஜயம் வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் புதிய கட்டடத்தினை திறந்துவைப்பார்

(பபித்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில்
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை வியாழக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள பல்வேறு நிகழ்வுகளில் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார்.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் புதிய கட்டடத்தினை திறந்து வைப்பதோடு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படுகின்ற கமநெகும திட்டம் 2012 இல் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலை என்கின்ற நிகழ்ச்சி திட்டத்தையும் அமைச்சர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.