செய்திகள்:
|
19.05.2012
(நிரோசன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நித்தியானந்த தியான பீடம் அமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தியான பீடத்தினூடாக மக்களுக்கு சேவையாற்றக் கிடைத்துள்ளதாக பீடத்தின் இணைப்பாளராகக் கடமையாற்றும் நித்தியானந்தாவின் சீடர் சிவகாந்தன் உமேஷ் த் தெரிவித்தார்.
கனடாவிலிருந்து வருகை தந்துள்ள சிவகாந்தன் உமேஷ்இ இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக சுவாமி நித்தியானந்தாவினால் அனுப்பப்பட்டதாகக்...
|
17.05.2012
(நிரோசன் )
மட்டக்களப்பு கோட்டையை பாதுகாத்து சுற்றுலா துறைக்கு பயன்படும் வகையில் கலாசார நிலையமாக மாற்றுதல் தொடர்பான ஆலோசனை கலந்தரையாடல் ஒன்று இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு வாவி சுற்றாடல் கற்கை நிலையத்தில் நடைபெற்றது.
பாலமீன்மடுவில் உள்ள இக்கற்கை நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்ற கலந்துரையாடலை நகர திட்டமிடல் கற்கை நிலையத்தினருடன் சுற்றாடல் திட்டமிடல் சேவைகள் நிறுவனம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது...
|
17.05.2012
வாக்கிய பஞ்சாங்கப்படி, குரு பகவான் மே 17, மாலை 6.25மணிக்கு, மேஷ ராசியில் இருந்து ரிஷபத்திற்கு பெயர்ச்சியாகிறார். 2013, மே 27 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார் இதையொட்டி ஏற்படும் பலன்களைக் காணலாம்.
நற்பலன் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம்.
சுமாரான பலன் பெறும் ராசிகள்: மிதுனம், தனுசு, கும்பம், மீனம்.
பரிகார ராசிகள்: ரிஷபம், சிம்மம், துலாம்.
தெரிந்து கொள்வோம் குருவை!
சொந்த வீடு...
|
|
17.05.2012
அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தந்தை செல்வாவின் நினைவுதின நிகழ்வுகளின் போது முதுபெரும் அரசியல்வாதியான இராஜதுரை அவர்கள் அவமதிக்கப்பட்டமை சம்பந்தமாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமை இன்றுவரை எதுவித கண்டனங்களையும் வெளியிடவில்லை. அரசியல் விமர்சனங்களை எப்படி முன்வைப்பது என்கின்ற அவை நாகரீகம் கூடத் தெரியாதவர்கள் எல்லாம் அரசியல் தலைவர்கள் என்பது ஒருபுறமிருக்க யார் துரோகி?
அதை யார் தீர்மானிப்பது....
|
17.05.2012
(கிரு)
இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் தையல் பயிற்சி நெறி ஆரம்ப நிகழ்வு மண்முனை வடக்கு இளைஞர் சேவை அதிகாரி நிசாந்தி அருண்மொழி அவர்களின் தலைமையில் 11.05.2012 அன்று கல்லடி,, திருச்செந்தூர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கிழக்கு மாகாண...
|
17.05.2012
(பபித்)
மட்டக்களப்பு ஆனைப்பந்தி இராம கிருஷ்ண மிஷன் பெண்கள் மகா வித்தியாலயத்தின் பவளவிழா மற்றும் பரிசளிப்பு விழா (16.05.2012) பாடசாலையின் ஒன்று கூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்கள் ஆசிரியர்கள் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதோடு பல கலை நிகழ்சிகளும் இடம்பெற்றன.
இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்...
|
|
17.05.2012
(கிரு)
லண்டனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடியைச் சேர்ந்த மரியதாஸ் முரளிதாஸின் மரணத்தில் தமக்குச் சந்தேகம் இருபப்பதாகவும் அதனால் அது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவரது தந்தை பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் சடலத்தினை இலங்கைக்குக் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தருமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது...
|
16.05.2012
(கிரு)
வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெறும் கல்விக் கண்காட்சியினை கிழக்கு முதல்வர் 15.05.2012 சென்று பார்வையிட்டார்.
இக் கல்விக் கண்காட்சி இன்றுடன் நிறைவுபெற இருந்தது. பலரின் வேண்டுகோளுக்கிணங்க நாளையும் கண்காட்சியினைப் பார்வையிட முடியும்.
|
16.05.2012
(பபித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக, முன்னாள் வவுனியா அரசாங்க அதிபராக பணியாற்றிய திருமதி சரோஜினி மன்மதராஜா சார்ள்ஸ் இன்று புதன்கிழமை 11.00 மணிக்கு கடமைகளை பொறுப்பேற்றார்.
மட்டக்களப்பு கச்சேரிக்கு விஜயம் செய்த புதிய அரசாங்க அதிபரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே. விமலநாதன் வரவேற்றதுடன் மாவட்ட செயலக ஊழியர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள விநாயகர்...
|
|
15.05.2012
(நிரோசன்)
மட்டக்களப்பு - வந்தாறுமூலைப் பகுதிகளில் வீதிகளில் அலைந்து திரிந்து மக்களுக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்த 30 கட்டாக்காலி மாடுகளை ஏறாவூர் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை பிடித்துள்ளனர்.
வீதிகளில் அலைந்து திரியும் மாடுகளால் பாதசாரிகளும் வாகன ஓட்டுநர்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருவதாக பொலிஸாருக்கு செய்து வந்த முறைப்பாட்டை அடுத்துஇக் கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளன...
|
15.05.2012
(கிரு)
வாழைச்சேனை பேத்தாளை விபுலானந்த வித்தியாலய பரிசளிப்பு விழா இன்று (15.05.2012) பேத்தாளை விபுலானந்த வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இப்பரிசளிப்பு விழாவில் திறமைகளை வெளிப்படுத்திய பல மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இப்பரிசளிப்பு விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களும் சிறப்பு அதிதியாக...
|
15.05.2012
(நிரோசன்)
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பாடசாலையில் சரஸ்வதி சிலை அமைக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து மட்டக்களப்பு பொலிஸாரால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று திங்கட்கிழமை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இவ்வழக்கை முடிவுக்கு கொண்டு வருவதாக நீதவான் அறிவித்ததுடன் வழக்கு தாக்கல் செய்யப்படும் போது என்ன நிலையில் பாடசாலை இருந்ததோ...
|
