இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துஅணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது.

பி.சாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 5 ஆவது நாளான இன்று இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 278 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன.

இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இத்தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றிபெற்றது. இதனால் 2 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 விகிதத்தில் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

கோடை விடுமுறை தொடங்கி விட்டது, கோலாகலமாக கொண்டாட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் வந்து விட்டன. இன்று மாலை சென்னையில், 5வது ஐபிஎல் தொடர் கலகலப்பான, விறுவிறுப்பான, கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக தொடங்குகிறது.இந்தி நடிகர்களின் ஆட்டம் பாட்டம், பிரபுதேவாவின் மின்னல் நடனம், அமெரிக்க பாப் பாடகி கேத்தி பெர்ரியின் கலக்கல் டான்ஸ் பிளஸ் பாடல் என தடபுடலான ஏற்பாடுகள் தொடக்க விழாவை ஜொலிக்க வைக்க தயாராக உள்ளன.

அமிதாப் பச்சன் முதல் சல்மான் கான் வரை சகலவிதமான மசாலாக்கள் தூவப்பட்ட தொடக்க விழாவைக் காண கோடானு கோடி கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணையும், காதையும் தீட்டி வைத்துக் காத்துள்ளனர்.

இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டி கொழும்பில் இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தன சற்று முன்னர் தனது 31வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.

இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியுள்ளது.
நான்காவது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, இலங்கையில் வருகிற செப்ரெம்பர் மாதம் நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கான டிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி) இணையதளம் மூலமாக பெறலாம். டிக்கெட் விலை மற்ற போட்டிகளை விட மிகவும் குறைவாக உள்ளது.

காலியில் நடைபெற்ற இங்கிலாந்துடனான முதலாது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 340 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த இங்கிலாந்து அணி போட்டியின் நான்காவது நாளான இன்று பிற்பகல், 264 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

அவ்வணியின் சார்பில் ஜொனதன் ட்ரொட் 112 ஓட்டங்களை பெற்றார். ஆனால் வேறு எவரும் அரைச்சதத்தையும் பெறவில்லை. மத்தியூ பிரையோர் 41 ஓட்டங்களைப் பெற்றார்.

இரண்டாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து வெற்றி
07.04.2012
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட்...
ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் 5!
03.04.2012
கோடை விடுமுறை தொடங்கி விட்டது, கோலாகலமாக கொண்டாட...
31வது சதம் அடித்தார் மஹேல!
03.04.2012
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான...
டி20 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது
31.03.2012
இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண...
முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது இலங்கை
29.03.2012
காலியில் நடைபெற்ற இங்கிலாந்துடனான முதலாது டெஸ்ட்...

விளையாட்டு

07.04.2012
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்துஅணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியுள்ளது. பி.சாரா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் 5 ஆவது நாளான இன்று இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 278 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்கள் மாத்திரமே தேவைப்பட்டன. இங்கிலாந்து அணி 19.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி...
03.04.2012
கோடை விடுமுறை தொடங்கி விட்டது, கோலாகலமாக கொண்டாட ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் வந்து விட்டன. இன்று மாலை சென்னையில், 5வது ஐபிஎல் தொடர் கலகலப்பான, விறுவிறுப்பான, கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக தொடங்குகிறது.இந்தி நடிகர்களின் ஆட்டம் பாட்டம், பிரபுதேவாவின் மின்னல் நடனம், அமெரிக்க பாப் பாடகி கேத்தி பெர்ரியின் கலக்கல் டான்ஸ் பிளஸ் பாடல் என தடபுடலான ஏற்பாடுகள் தொடக்க விழாவை ஜொலிக்க வைக்க தயாராக உள்ளன....
03.04.2012
இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டி கொழும்பில் இடம்பெற்றுவரும் நிலையில் இலங்கை அணித் தலைவர் மஹேல ஜயவர்த்தன சற்று முன்னர் தனது 31வது சதத்தை பூர்த்தி செய்துள்ளார்.
31.03.2012
இலங்கையில் நடைபெற உள்ள டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நேற்று தொடங்கியுள்ளது. நான்காவது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி, இலங்கையில் வருகிற செப்ரெம்பர் மாதம் நடைபெற உள்ளது. போட்டிக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே டிக்கெட் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட்டை சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐ.சி.சி) இணையதளம் மூலமாக பெறலாம். டிக்கெட் விலை மற்ற...
29.03.2012
காலியில் நடைபெற்ற இங்கிலாந்துடனான முதலாது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 75 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது. வெற்றி பெறுவதற்கு இரண்டாவது இன்னிங்ஸில் 340 ஓட்டங்கள் பெற வேண்டியிருந்த இங்கிலாந்து அணி போட்டியின் நான்காவது நாளான இன்று பிற்பகல், 264 ஓட்டங்களுடன் சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அவ்வணியின் சார்பில் ஜொனதன் ட்ரொட் 112 ஓட்டங்களை பெற்றார். ஆனால் வேறு எவரும் அரைச்சதத்தையும்...
29.03.2012
ஐந்தாவது ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் புனே வாரியர்ஸ் அணியில் அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் விளையாடுகிறார், இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கங்குலிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை கிளார்க் தவிர்த்து வந்தார். இந்த ஆண்டில் முதல் முறையாக ஐபிஎல் போட்டிகளில் அவர் விளையாட இருக்கிறார். புனே அணியில் கிளார்க் இணைந்துள்ளதால், அந்த...
29.03.2012
இந்திய அணியின் முன்னாள் நட்சத்திரச் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளேயுடன் இணைந்து செயற்படுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். எதிர்வருகிற ஐ.பி.எல் போட்டிகளில் முத்தையா முரளிதரன், ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சார்பாக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரோயல் சலஞ்சர்ஸ் அணியின் நிர்வகிப்பவர்களில் ஒருவராக கும்ப்ளே...
25.03.2012
இந்திய கிரிக்கெட் அணி வீரர் யூசுப் பதான் அப்ரீன் என்ற பெண்ணை மணக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் குஜராத் மாநிலம் வடோதராவில் இருந்து 60 கி.மீ தொலைவில் உள்ள நடியாட் என்ற இடத்தில் உள்ள பதானின் பண்ணை வீட்டில் சனிக்கிழமை மிக எளிமையாக நடைபெற்றது. அவருடைய நெருங்கிய உறவினர்கள் சிலரும், இளைய சகோதரர் இர்ஃபான் பதானும் பங்கேற்றதாக தெரியவந்துள்ளது. இதை அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரும் உறுதிபடுத்தியுள்ளார்...
25.03.2012
விமான நிலையத்தில் தன் மகளை தள்ளி விட்டதால் தான் ரசிகரை தாக்கினேன் என்று அப்ரிடி விளக்கமளித்து அப்ரிடி மன்னிப்பு கேட்டார். வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்று ஆசியக் கிண்ணத்தோடு நாடு திரும்பிய பாகிஸ்தான் அணிக்கு கராச்சி விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான ரசிகர்கள் விமான நிலையத்தில் திரண்டு இருந்தனர். முன்னாள் அணித்தலைவர்...
24.03.2012
ஐ.பி.எல் புனே வாரியர்ஸ் அணியின் தலைவராக முன்னாள் இந்திய அணித்தலைவர் சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். ஐந்தாவது ஐ.பி.எல் டுவென்டி-20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 4ம் திகதி தொடங்குகிறது. இதில் புனே வாரியர்ஸ் அணியின் தலைவராக யுவராஜ் சிங் இருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இவர், அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு பதில் புதிய அணித்தலைவர் மற்றும் ஆலோசகராக கங்குலி...
24.03.2012
ஆசியக் கிண்ண கிரிக்கெட்டில் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணி வீரர்கள் நேற்று நாடு திரும்பினர். அப்போது வீரர்களை வரவேற்பதற்காக கராச்சி விமான நிலையம் முன்பு அதிக அளவில் ரசிகர்கள் குவிந்திருந்தனர். பாகிஸ்தான் வீரர்கள் விமான நிலையத்தை விட்டு வெளியே வரும் சமயம் ரசிகர் ஒருவர் அதிரடி ஆட்டக்காரரான அப்ரிடியிடம் கையெழுத்து கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த அப்ரிடி அந்த ரசிகரை தாக்கி, கீழே...
23.03.2012
பிரபலமானவர்கள் அவதூறுகளுக்கு இலகுவான இலக்காக உள்ளனர் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் திலகரட்ன டில்ஷானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து, அவரின் மனைவி, மஞ்சுளா திலினி கருத்துத் தெரிவிக்கையில் கூறியுள்ளார். 'டில்ஷானுக்கு எதிராக இவ்வாறான குற்றச்சாட்டு வருவது இதுதான் முதல் தடவையல்ல. இவ்வாறான அவதூறுகளுக்கு பிரபலமானவர்கள் இலகுவான இலக்காக உள்ளனர் என்பது யாவரும் அறிந்ததே. ஒரு சமயம் நானும் இவ்வாறான...